கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை


கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Sept 2023 10:35 AM IST (Updated: 3 Sept 2023 11:14 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை கேரள மாநிலத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழையாக நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 சூறாவளி சுழற்சிகள் இணைந்திருப்பதால் வியாழக்கிழமை வரை மழையின் தாக்கம் இருக்கும் என்பதால், மலைப்பாங்கான கிராமங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொல்லம், ஆலப்புழா, இடுக்கி மற்றும் பத்தனம் திட்டா மாவட்டங்களில் இந்த மழை அதிக அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா மற்றும் பத்தனம் திட்டா மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலப்புழா மாவட்டத்திற்கு நாளை மற்றும் 5-ந்தேதியும், இடுக்கி மாவட்டத்திற்கு 6-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story