அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி. கடிதம்
நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்றும் அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் 5 பக்க கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி குற்றச்சாட்டுகள் மிக கடுமையானவை. பிரதமரின் நெருங்கிய நண்பர் செய்த மிகப்பெரிய ஊழல். இதுபற்றி நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதானி குழும நிறுவனர் கவுதம் அதானி மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரது பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முடியாது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்ப உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story