ஜனநாயகத்தை காப்பதே எங்கள் ஒற்றை நோக்கம் - உத்தவ் தாக்கரே பேட்டி
ஜனநாயகத்தை காப்பதே எங்கள் ஒற்றை நோக்கம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,
மும்பையில் நாளை முதல் 2 நாட்களுக்கு இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
"3-வது இந்திய கூட்டணி கூட்டத்தில் 28 கட்சிகள் சார்பில் 63 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு கட்சிகளுக்கும் சித்தாந்தங்கள் வேறாக இருக்கலாம்; ஆனால் ஜனநாயகத்தை காப்பதே எங்கள் ஒற்றை நோக்கம். இந்தியா கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைகின்றன. இந்தியா கூட்டணியின் வளர்ச்சியை பார்த்து பயத்தில் பாஜக அரசு இலவசமாக கூட கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கும். " என்று கூறினார்.