2002-ம் ஆண்டு முதல் வெள்ளத்தால் மேற்கு வங்காளம், அசாமில் 4,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - மத்திய அரசு தகவல்


2002-ம் ஆண்டு முதல் வெள்ளத்தால் மேற்கு வங்காளம், அசாமில் 4,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - மத்திய அரசு தகவல்
x

கோப்புப்படம் PTI

தினத்தந்தி 28 July 2023 6:45 AM IST (Updated: 28 July 2023 6:38 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2002-ம் ஆண்டு முதல் வெள்ளத்தால் மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் 4,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

கடந்த 2002-ம் ஆண்டு முதல் மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் 4,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒரு கேள்விக்கு நேற்று மக்களவையில் பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிஷ்வேஸ்வா துடு, கடந்த 2002-ம் ஆண்டு முதல் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் வெள்ளத்தால் மொத்தம் ரூ.80,000 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தரவுகளின்படி, கடந்த 2002-ம் ஆண்டு முதல் மேற்கு வங்காளத்தில் 2,722 பேரும் அசாமில் 1500 பேரும் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளத்தால் மேற்கு வங்காளத்தில் ரூ.64,726 கோடியும், அசாமில் ரூ.16,346 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Next Story