பயணி ஒருவரின் செல்போன் அதிக சூடானதால் தாமதமான ஏர் இந்தியா விமானம்


பயணி ஒருவரின் செல்போன் அதிக சூடானதால் தாமதமான ஏர் இந்தியா விமானம்
x

கோப்புப்படம்

பயணி ஒருவரின் செல்போன் அதிக சூடானதால் ஏர் இந்தியா விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

மும்பை,

டெல்லிக்கு உதய்பூரிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், பயணி ஒருவரின் செல்போன் சார்ஜரில் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் உதய்பூர் விமான நிலையத்துக்கு திரும்பியது. பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டது.

முன்னதாக இன்று ஏஐ 470 என்ற ஏர் இந்தியா விமானம் உதய்பூரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது. இந்த நிலையில் விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவரது செல்போன் அதிக சூடானது. இதையடுத்து கேபின் பணியாளர்கள் எச்சரிக்கப்பட்டனர். பின்னர் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது.

மேலும் விமானத்தில் திடீரென புகை எழும்பியதால் விமானம் திரும்பியதாக உதய்பூர் விமான நிலைய அதிகாரி ஒருவர், தெரிவித்தார். எனினும் முழுமையான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

1 More update

Next Story