இந்து பெண் தலை துண்டித்து கொல்லப்பட்ட விவகாரம்: இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்


இந்து பெண் தலை துண்டித்து கொல்லப்பட்ட விவகாரம்: இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்
x

பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தானின் சின்ஜோரோ நகரில் நேற்று இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 40 வயது விதவை பெண் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது உடல் மிகவும் மோசமான நிலையில் சிதைக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது தலை உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. தலை முழுவதும் உள்ள சதையை காட்டுமிராண்டிகள் அகற்றியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கை எதுவும் எங்களிடம் இல்லை. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு அந்நாடு தான் பொறுப்பு. சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான தனது பொறுப்பை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும் என கடந்த காலங்களில் நாங்கள் கூறியுள்ளோம். நான் அதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story