எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் நடமாட்டம்: தயார் நிலையில் ட்ரோன் வேட்டை படை..!
ஜம்மு எல்லைகளில் ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டதால் உஷார்நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மூ காஷ்மீர்,
பஞ்சாப் மற்றும் ஜம்மூ காஷ்மீர் மாநிலங்களில் ட்ரோன்களின் நடமாட்டம் மிண்டும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் தரப்பில் ஏவப்படும் ட்ரோன்கள் நடமாட்டம் இந்திய எல்லைப் பகுதிகளில் அண்மைகாலத்தில் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் ட்ரோன்கள் ஏதேனும் தென்பட்டால் அவற்றை உடனடியாக சுட்டு வீழ்த்த எல்லை பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பஞ்சாப் எல்லை மற்றும் ஜம்மு எல்லைகளில் ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டதால் உஷார்நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story