பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டு; கிராம மக்கள் போராட்டம்


பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டு; கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2022 7:00 PM GMT (Updated: 15 Oct 2022 7:00 PM GMT)

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா அமிர்தாபுரா கிராமத்தில் சித்தார்தா நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 45 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு இதுவரை கிராம பஞ்சாயத்து சார்பில் மின் இணைப்போ, குடிநீர் வசதியோ, சாலை வசதியே செய்து ெகாடுக்காமல் இருந்து வந்தனர்.

இதனால் அந்த பகுதி மக்கள் பல போராட்டம் நடத்தி வந்தனர். ஆனாலும் கூட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதையடுத்து கிராம மக்கள், அதிகாரிகளை அலுவலகத்தின் உள்ளே வைத்து கதவை பூட்டி போராட்டம் நடத்தினர். அவர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை கதவை திறக்கமாட்டோம் என கூறி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் பூர்ணிமா அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி விரைவில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கதவை திறந்து விட்டனர். மேலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றால் நூதன முறையில் போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story