நாடாளுமன்ற தேர்தல்: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்


நாடாளுமன்ற தேர்தல்: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
x
தினத்தந்தி 12 March 2024 6:19 PM IST (Updated: 12 March 2024 6:48 PM IST)
t-max-icont-min-icon

அசாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 39 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் வெளியிட்டு இருந்தது. அதில், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில், 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அசாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அசோக் கெலாட்டின் மகன் வைபர் கெலாட் ஜல்லூர் (ராஜஸ்தான்) தொகுதியிலும் கமல்நாத் மகன் நகுல் நாத் சிந்த்வாரா (மத்திய பிரதேசம்) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.




Next Story