மெட்ரோ ரெயிலில் கோபி மஞ்சூரியனை ருசித்த பயணி- வீடியோ வைரலாகி சர்ச்சை


மெட்ரோ ரெயிலில் கோபி மஞ்சூரியனை ருசித்த பயணி- வீடியோ வைரலாகி சர்ச்சை
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:46 PM GMT)

பெங்களூருவில் விதிமீறி மெட்ரோ ரெயிலில் கோபி மஞ்சூரியனை ருசித்த பயணி வீடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு:-

பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயிலுக்குள் பயணிகள் போதை பொருட்களை பயன்படுத்துவது, உணவு அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு சவுத் என்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள மெட்ரோ ரெயிலில் ஒரு ஆண் பயணி பயணம் செய்துள்ளார். அப்போது அந்த நபர் ஓடும் மெட்ரோ ரெயிலில் கோபி மஞ்சூரியனை ருசித்தபடி இருந்துள்ளார்.

இதனை அவருடன் வந்த ஒருவரே செல்போனில் வீடியோவாக எடுத்்துள்ளார். அந்த வீடியோவை சமூகவலைத்தளங் களிலும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரெயிலில் உணவு பொருட்களை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விதிமீறி அந்த நபர் கோபி மஞ்சூரியனை ருசித்ததற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபரை கண்டறிந்த மெட்ரோ ஊழியர்கள், அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


Next Story