திருப்பதி லட்டு விவகாரத்திற்காக பரிகாரம் - 11 நாட்கள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்
திருப்பதி லட்டு விவகாரத்திற்கு பரிகாரமாக 11 நாட்கள் விரதம் மேற்கொள்ள இருப்பதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு பரிகாரமாக 11 நாட்கள் விரதம் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கப் போவதாக ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் நேற்று அறிவித்தார்.
அதன்படி இன்று ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு பவன் கல்யாண் வருகை தந்தார். அங்கு நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பவன் கல்யாண், 11 நாட்கள் விரதத்தை தொடங்கினார். தொடர்ந்து வரும் அக்டோபர் 1, 2 ஆம் தேதிகளில் அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story