டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!


டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
x

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் ஓடும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் யமுனை ஆற்றில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் யமுனையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால், தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இருப்பினும், யமுனை ஆற்றில் இன்று (ஆகஸ்ட் 14) அபாயக் குறியான 205.33 மீட்டருக்குக் கீழே 204.91 மீட்டரில் தண்ணீர் பாய்கிறது. எனினும், யமுனை நதி நிரம்பி வழிவதால் மயூர் விஹார் முதல் கட்டம் மற்றும் அக்ஷர்தாம் கோயில் அருகே தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதற்கிடையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆற்றின் அருகே செல்வதைத் தவிர்க்குமாறு குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story