அதிகரிக்கும் கொரோனா பரவல்: மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை


அதிகரிக்கும் கொரோனா பரவல்: மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை
x

கோப்புப்படம்

அதிகரிக்கும் கொரோனா பரவலால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது அபாய அளவில் இல்லையென்றாலும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நாட்டில் தற்போதைய கொரோனா பரவலுக்கு எக்ஸ்.பி.பி. 1.16 திரிபுதான் காரணமாக இருக்கலாம். இந்த தொற்று பாதித்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியது இல்லை என்பதால் அபாயம் குறைவாகவே உள்ளது' என்று தெரிவித்தார்.

அதேநேரம், இந்த தொற்றால் அபாயம் குறைவு என்றாலும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3,641 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இதன்மூலம் சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது.

இதைப்போல 11 பேர் ஒரே நாளில் பலியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Next Story