காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர் - உமர் அப்துல்லா


காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர் - உமர் அப்துல்லா
x

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறு வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது தொகுதி மறு வரையறை பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பான முடிவை நாங்கள் எடுக்க முடியாது. ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம் தான் எடுக்கும். எப்போது தேர்தலை நடத்தவேண்டும். எந்த சூழ்நிலையில் தேர்தல் நடத்த வேண்டுமென்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். எவ்வளவு விரைவில் தேர்தல் நடத்தமுடியுமோ அவ்வளவு விரைவில் தேர்தலை நடத்த வேண்டுமென் ஜம்முகாஷ்மீர் மக்கள் நினைக்கின்றனர். தற்போதைய நிர்வாகத்தால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். தங்களின் கருத்துக்களை யாரும் கேட்காததால் மக்கள் கவலையுடன் உள்ளனர்' என்றார்.


Next Story