கடவுள் படத்தை காட்டி மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

கோப்புப்படம்
பிரதமர் மோடி ஏற்கனவே பல உத்தரவாதங்களை அளித்ததார். அவற்றில் எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பூத் கமிட்டி ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், "கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. நாட்டில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு நெருக்கடியில் இருக்கும்போது, பாகிஸ்தான், சீனா என்று சாக்கு போக்குகளை கூறுகிறார் பிரதமர் மோடி. கடவுளின் படத்தை காட்டி மக்களின் வயிற்றை நிரப்ப முடியாது. எனவே மக்கள், பிரதமர் மோடியின் பொறியில் விழ வேண்டாம்.
பிரதமர் மோடி ஏற்கனவே பல உத்தரவாதங்களை அளித்ததார். அவற்றில் எதுவும் அவர் நிறைவேற்றவில்லை" என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
Related Tags :
Next Story






