சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனு - கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி


சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனு - கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி
x

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்த நிலையில், 2020-ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து டி.கே.சிவகுமார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.நடராஜன், டி.கே.சிவகுமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை ரத்து செய்த நீதிபதி, வழக்கில் சி.பி.ஐ. 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.


Next Story