பொதுக்குழு தீர்மானங்களுக்கு, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கோரி மனு - டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!


பொதுக்குழு தீர்மானங்களுக்கு, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கோரி மனு - டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!
x
தினத்தந்தி 10 April 2023 2:30 AM GMT (Updated: 10 April 2023 2:30 AM GMT)

எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

அ.தி.மு.க.வில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது செயல்பட்டு வருகிறார். முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். மேலும். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி பிரதீபா எம்.சிங் அமர்வில் 10-ந்தேதி (இன்று) விசாரணைக்கு வருகிறது.


Next Story