நேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

நேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 14 Nov 2022 10:45 PM GMT (Updated: 14 Nov 2022 10:45 PM GMT)

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினமான ஜனவரி 23-ந்தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நேதாஜி பெயரில் நினைவரங்கத்தையும், அருங்காட்சியகத்தையும் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் நிறுவ உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு் 'தேசிய விடுமுறை அறிவிக்கும் விவகாரம் மத்திய அரசின் கொள்கை சார்ந்தது என்பதால், அதில் தலையிட முடியாது' என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

Next Story