எங்களது மாவட்டத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும் என மனு; சுப்ரீம் கோர்ட்டு அளித்த பதில்...


எங்களது மாவட்டத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும் என மனு; சுப்ரீம் கோர்ட்டு அளித்த பதில்...
x

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் எங்களது மாவட்டத்தில் நின்று செல்ல வேண்டும் என கேரள வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு பதில் அளித்து உள்ளது.

புதுடெல்லி,

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் இருந்து காசர்கோடு நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே நாளில் அந்த ரெயில் திரும்பி வருகிறது.

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த 39 வயது வழக்கறிஞர் ஒருவர் தனது சொந்த மாவட்டத்தில் ரெயில் நின்று செல்ல வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மலப்புரம் மாவட்டத்தில் ரெயில் நின்று செல்ல கோரிக்கை விடுத்து உள்ள அவர், முன்பே அனுமதி அளித்து இருந்த திரூர் ரெயில் நிலைய நிறுத்தம் பின்னர் நீக்கப்பட்டது மாவட்ட மக்களுக்கு இழைத்த அநீதி என அதில் தெரிவித்து உள்ளார்.

அதனால், இதனை பரிசீலிக்கும்படி அரசிடம் கேட்டு கொள்ள வேண்டும் என்றும் கோர்ட்டில் அவர் கோரியுள்ளார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நரசிம்மா மற்றும் மனோஜ் மிஷ்ரா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட் கூறும்போது, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல கூடிய இடங்களை நாங்கள் முடிவு செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? அடுத்து டெல்லி-மும்பை ராஜ்தானி ரெயில் நிறுத்த அட்டவணையை நாங்கள் தயாரிக்கவா? இது ஒரு கொள்கை முடிவு. இதுபற்றி அதிகாரிகளிடம் சென்று கேளுங்கள்.

இதில், நான் தலையிட முடியாது. பின்னர், இந்த விவகாரம் பற்றி கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது போலாகி விடும். ஒவ்வொரு நபரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப ரெயில் நிறுத்தம் வேண்டும் என கோரினால், அதி விரைவு ரெயில்கள் என்பதற்கான நோக்கமே மறைந்து விடும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story