மனைவி உடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரிய மனுக்கள் - மே 9-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மனைவி உடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரிய மனுக்கள் - மே 9-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

மேல்முறையீட்டு மனுக்களை மே 9-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

மனைவி உடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரி ஹார்மனி, ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் முறையிட்டார்.மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பதில் மனு தயார் நிலையில் இருப்பதாகவும், சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, மேல்முறையீட்டு மனுக்களை மே 9-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டது.


Next Story