தந்தையின் முதல்-மந்திரி நாற்காலியில் அமர்ந்த மகன்…! வைரலான புகைப்படம்!


தந்தையின் முதல்-மந்திரி  நாற்காலியில் அமர்ந்த மகன்…!  வைரலான புகைப்படம்!
x

ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்து இருக்கும் சேருக்கு பின்னால் வைக்கப்பட்டுள்ள பலகையில், "மராட்டிய அரசு - முதல்-மந்திரி" என எழுதப்பட்டுள்ளது.

மும்பை

மும்பை, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் இருக்கையில் அவரது மகனும், எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்து இருந்ததாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் இருக்கையில் அவரது மகனும், எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்து இருந்த சம்பவம் மராட்டிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான படம் சமூகவலைதளத்தில் பரவியது. அந்த படத்தில் ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்து இருக்கும் சேருக்கு பின்னால் வைக்கப்பட்டுள்ள பலகையில், "மராட்டிய அரசு - முதல்-மந்திரி" என எழுதப்பட்டுள்ளது.

இந்த படம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே, " நீங்கள் சூப்பர் முதல்-மந்திரியாக ஆகிவிட்டீர்களா?. இந்த செயலுக்காக நீங்கள் மராட்டிய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் " என கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, " குறிப்பிட்ட படம் முதல்-மந்திரியின் அரசு பங்களா அல்லது அலுவலகத்தில் எடுக்கப்பட்டது அல்ல. தானேயில் உள்ள ஏக்நாத் ஷிண்டேயின் தனியார் வீடு-அலுவலகத்தில் எடுக்கப்பட்டது.

நானும், தந்தை ஏக்நாத் ஷிண்டேவும் அந்த அலுவலகத்தில் தான் பொது மக்களை சந்திபோம். முன்னாள் இருந்த முதல்-மந்திரியை போல ஒரே இடத்தில் இருக்காமல், எனது தந்தை ஒரு நாளில் 18 முதல் 20 மணி நேரம் வரை உழைக்கிறார்" என விளக்கம் அளித்து உள்ளார்.

உத்தவ் தாக்கரே கொரோனா பரவலின் போது வீட்டில் இருந்தபடி வேலை செய்கிறார் என பா.ஜனதா குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story