பல்கலைகழக தேர்வு நுழைவுச்சீட்டில் பிரதமர் மோடி, தோனி புகைப்படங்கள் - அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்


பல்கலைகழக தேர்வு நுழைவுச்சீட்டில் பிரதமர் மோடி, தோனி புகைப்படங்கள் - அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்
x

பீகாரில் பல்கலைகழக தேர்வு நுழைவுச்சீட்டில் பிரதமர் மோடி, தோனியின் புகைப்படங்கள் இடம்பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்பங்கா,

பீகாரில் தேர்வு நுழைவுச்சீட்டில் பிரதமர் மோடி, முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் இடம்பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்பங்காவில் உள்ள லலித் நாராயண் மித்திலா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் பெறப்பட்டது.

இந்த நிலையில் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை மாணவர்கள் தரவிறக்கம் செய்த போது, அதில் பிரதமர் மோடி, மகேந்திர சிங் தோனி, பீகார் கவர்னர் பகு சவுகானின் புகைப்படங்கள் இடம்பெற்றன.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, புகைப்படங்கள் மற்றும் விவரங்களை மாணவர்களே பதிவேற்றம் செய்ததாகவும் சிலரின் செயலால் இதுபோன்ற தவறு நிகழ்ந்துள்ளதாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் புகைப்படம் மாறியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story