தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 24 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டம்
கங்கை நதிக்கரை, அயோத்தி ராமர் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோவில்களில் விளக்குகளை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
லக்னோ,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சுமார் 24 லட்சம் அகல் விளக்குகளை ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கங்கை நதிக்கரை, அயோத்தி ராமர் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோவில்கள், மடங்கள் உள்ளிட்ட இடங்களில் விளக்குகளை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது அயோத்தியில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு 24 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றுவதற்கான பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story