ஜி-20' மாநாட்டையொட்டி டெல்லியில் 20 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்
‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாடு செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
'ஜி-20' நாடுகளின் உச்சி மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதையொட்டி டெல்லியில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக டெல்லியில் 20 லட்சம் மரக்கன்றுகளை நட அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் 12 லட்சம் மரக்கன்றுகளை வனம் மற்றும் வனவிலங்குத் துறையும், மற்றவையை பிற நிறுவனங்கள் நடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜக்கராண்டா, பலாஸ் போன்ற பூச்செடிகள் அதிக அளவில் நடப்படும் என்றும் ஜூலை இறுதிக்குள் மரக்கன்றுகளை நடும் பணிகள் முடிவடையும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story