டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து: ஊழியர்கள் உயிர் தப்பினர்
தீ விபத்து மின்சார பழுது காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
புதுடெல்லி,
டெல்லி புறநகர் பகுதியான போர்கர் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று காலை 6 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பிளாஸ்டிக் துகள்கள் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக பரவியது. இதன் காரணமாக கரும்புகை மண்டலம் சூழ்ந்து அந்த பகுதி மிக மோசமாக காட்சி அளித்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். மொத்தம் 15 வாகனங்கள் தீயணைப்புக்கு பயன்படுத்தப்பட்டன. சில மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் இல்லை. அங்கிருந்த ஊழியர்கள் காயமின்றி தப்பித்தனர். தீ விபத்து மின்சார பழுது காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story