'பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து 10 வருடங்கள் ஆகிறது' - முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகர் விமர்சனம்

Image Courtesy : @PankajPachauri
பத்திரிக்கையாளர்களின் 62 திட்டமிடாத கேள்விகளுக்கு மன்மோகன் சிங் பதிலளித்தார் என பங்கஜ் பச்சோரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய பிரதமராக உள்ள ஒருவர் செய்தியாளர் சந்திப்பை நடத்தி 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாக மத்திய அரசின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகரும், பத்திரிக்கையாளருமான பங்கஜ் பச்சோரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி இந்திய பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 100-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் 62 திட்டமிடாத கேள்விகளுக்கு பதிலளித்தார் என பங்கஜ் பச்சோரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






