புதிய இந்தியாவின் சிற்பி-பிரதமர் மோடி: மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் புகழாரம்!


புதிய இந்தியாவின் சிற்பி-பிரதமர் மோடி: மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் புகழாரம்!
x
தினத்தந்தி 6 Nov 2022 7:10 PM IST (Updated: 6 Nov 2022 7:19 PM IST)
t-max-icont-min-icon

துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்த இரண்டு புத்தகங்களை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டார்.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பிரதமர் மோடியை, அவரது தொலைநோக்குப் பார்வையை பாராட்டினார்.

துபாயில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் மோடியின் ஆட்சி குறித்த இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பேசியதாவது ,

2014க்கு முன், இந்தியா உலகின் பலவீனமான ஜனநாயக நாடுகளில் ஒன்றாக காணப்பட்டது. பின்னர் ஊழல், நம் நாட்டின் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அறியப்பட்டது. இன்று உலகம் நம் நாட்டை சீர்திருத்தங்கள், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகம் மற்றும் பொறுப்பு கொண்ட நாடாக பார்க்கிறது.

இன்று, இந்தியாவில் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் பயனாளிகளின் கணக்கிற்கு நேரடியாகவும் டிஜிட்டல் முறையிலும் சென்றடைவதே இந்தியாவின் வெளிப்படைத்தன்மையின் நிலை. பிரதமர் மோடி புதிய இந்தியாவின் சிற்பி. பிரதமர் மோடியின் கடந்த எட்டு ஆண்டுகால தலைமை, இந்தியாவை பல துறைகளில் மாற்றியுள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையில், உண்மையான வரி வசூல், அரசு நிர்ணயித்த இலக்குகளை விட அதிகமாக இருந்தது. தற்போது இந்திய அரசு ஆண்டுக்கு ரூ.7.5 லட்சம் கோடியை உள்கட்டமைப்பு வசதிகளுக்காக செலவிடுகிறது.

கொரோனா காலத்தில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா தொற்றுநோயை ஒரு வாய்ப்பாக மாற்றியது மற்றும் ஒரு தன்னம்பிக்கைமிக்க தேசத்திற்கான அடித்தளத்தை அமைத்தது. அந்த நேரத்தில் நமது குடிமக்களுக்காக 200 மில்லியன் உள்நாட்டு தடுப்பூசிகளை நாங்கள் தயாரித்தது மட்டுமல்லாமல், உலகிற்கு மலிவு விலையில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உலகளாவிய உற்பத்தி மையமாகவும் இந்தியா உருவெடுத்தது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story