'71 ஆயிரம் பேருக்கு வேலை, தேர்தல் விளம்பர தந்திரம்' - காங்கிரஸ் கட்சி விமர்சனம்


71 ஆயிரம் பேருக்கு வேலை, தேர்தல் விளம்பர தந்திரம் - காங்கிரஸ் கட்சி விமர்சனம்
x

71 ஆயிரம் பேருக்கு வேலை என்பது தேர்தல் விளம்பர தந்திரம் என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 71 ஆயிரம் பேரை நியமித்து நேற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்ட பயனாளிகள் மத்தியில் பிரதமர் மோடி நேற்று காணொலிக்காட்சி வழியாக பேசினார்.இதை காங்கிரஸ் கட்சி குஜராத் தேர்தல் 'ஸ்டண்ட்' என விமர்சித்து உள்ளது.

இதுபற்றி அந்தக் கட்சியின் தலைவர் கார்கே விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், " பிரதமர் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கி இருக்கிறார். இது (குஜராத்) வாக்காளர்களை தவறாக வழிநடத்துவதாகும். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளன. வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள். அப்படியென்றால் 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை தந்திருக்க வேண்டும். ஆயிரங்களில் மட்டுமே தேர்தல் விளம்பர தந்திரத்தை அரங்கேற்றி உள்ளனர்" என கூறி உள்ளார்.


Next Story