வாரணாசியில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
வாரணாசியில் 1800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
வாரணாசி,
உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்து விட்டது. நேற்று முன்தினத்துடன் 100 நாட்கள் ஆட்சி முடிவடைந்தது. இந்த கொண்டாட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று சொந்த தொகுதியான வாரணாசி வந்தடைந்தார். வாரணாசி வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் வாரணாசியில் நடைபெற்ற விழாவில், 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story