சுதந்திர போராட்ட வீரர் மகளின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி!


சுதந்திர போராட்ட வீரர் மகளின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி!
x

சுதந்திர போராட்ட வீரர் பசல கிருஷ்ணமூர்த்தியின் மகளின் காலை தொட்டு பிரதமர் மோடி வணங்கினார்.

புதுடெல்லி,

ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாளின் ஓராண்டு கால விழாவை முன்னிட்டு, 30 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார்.

"டிஜிட்டல் இந்தியா பாஷினி", "டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ்" உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மை ஸ்கீம், மேரி பெஹச்சான் ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்தநிலையில் பீமாவரத்தில் தனது உரைக்குப் பிறகு, ஆந்திராவை சேர்ந்த மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசல கிருஷ்ண மூர்த்தியின் மகள் பசல கிருஷ்ண பாரதியை (வயது 90) சந்தித்து அவரது காலைத்தொட்டு வணங்கினார் பிரதமர் மோடி. பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.


Next Story