சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீட்டு பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்
இந்தியாவின் 76% மக்கள் பிரதமர் மோடியின் தலைமைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
புதுடெல்லி,
அமெரிக்காவைச் சேர்ந்த 'மார்னிங் கன்சல்ட்' என்ற ஆய்வு நிறுவனம் 'சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீடு' என்ற கருத்து கணிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி பிரதமர் நரேந்திர மோடி 76% ஒப்புதல் விகிதத்துடன் சர்வதேச தலைவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியாவின் 76% மக்கள் பிரதமர் மோடியின் தலைமைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 18% மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், 6% பேர் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
இந்த பட்டியலில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவெல்(66%) 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்(58%) 3-வது இடத்திலும் உள்ளனர். இந்த ஆய்வு நிறுவனத்தின் முந்தைய கருத்து கணிப்புகளிலும் பிரதமர் மோடி சர்வதேச அளவில் முதலிடத்தில் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.