சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று நிறைவுரை

கோப்புப்படம்
சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று நிறைவுரையாற்ற உள்ளார்.
புதுடெல்லி,
பல்லாண்டுகளுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு பலர் இடம்பெயர்ந்தனர். இந்த இரு மாநிலங்களுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிப்பதற்காக, குஜராத் மாநிலம் சோம்நாத்தில், 'சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கடந்த 17-ந் தேதி இந்நிகழ்ச்சி தொடங்கியது. 10 நாட்களாக நடைபெற்ற நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நிறைவடைகிறது.
இதையொட்டி, நிறைவுநாள் நிகழ்ச்சியில், இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். இத்தகவலை பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






