ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி செல்கிறார் பிரதமர் மோடி


ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி செல்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 22 Jun 2022 11:57 AM GMT (Updated: 22 Jun 2022 11:57 AM GMT)

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 26 ஆம் தேதி ஜெர்மனி செல்கிறார்.

புதுடெல்லி,

ஜி- 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 26 ஆம் தேதி ஜெர்மனி செல்கிறார். 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ஜி 7 உச்சி மாநாட்டில் இரண்டு அமர்வுகளில் பங்கேற்கிறார். பின்னர், ஜி 7 நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

2 நாள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு வரும் 28 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்திக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு சையது அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.


Next Story