தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதன்படி 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இதனைத்தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டம், கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டணியில் மொத்தம் 38 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
முன்னதாக மணிப்பூர் பிரச்சனையை முன்வைத்து கடந்த ஒரு வார காலமாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்துள்ளன.. இதனைத் தொடர்ந்து 21 எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒன்றாக மணிப்பூர் மாநிலம் சென்று, மணிப்பூர் நிலைமைகளை ஆய்வும் செய்து டெல்லி திரும்பினர். மேலும் அடுத்த "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் மராட்டிய மாநிலத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.