குஜராத்தில் ராணுவ விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை இன்று அடிக்கல் நாட்டுகிறார் - பிரதமர் மோடி


குஜராத்தில் ராணுவ விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை இன்று அடிக்கல் நாட்டுகிறார் - பிரதமர் மோடி
x

குஜராத்தில் ராணுவ விமானம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

ஆமதாபாத்,

இந்திய விமானப்படை, அவ்ரோ-748 ரக விமானங்களை விமானப்படையினரின் போக்குவரத்துக்கும், சரக்குகளை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தி வருகிறது. இவை மிக பழமையானதாகி விட்டதால், ஐரோப்பிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான ஏர் பஸ்சின் சி-295 ரக ராணுவ விமானங்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி, 56 சி-295 ரக விமானங்கள் ரூ.21 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்படுகின்றன.

இவற்றில், 4 ஆண்டுகளுக்குள் ஸ்பெயின் நாட்டில் உள்ள தனது தொழிற்சாலையில் 16 விமானங்களை தயாரித்து, பறக்கும் நிலை யில் இந்தியாவிடம் ஏர்பஸ் ஒப்படைக்க வேண்டும். மீதி 40 விமானங்களை, இந்தியாவில் டாடா கன்சார்ட்டியம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து ஒப்படைக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தப்படி, குஜராத் மாநிலம் வடோதராவில், சி-295 ரக போக்குவரத்து விமானங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குஜராத்தில் ராணுவ விமானம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா, குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.


Next Story