பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்; பால விபத்து பகுதியை பார்வையிடுகிறார்


பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்; பால விபத்து பகுதியை பார்வையிடுகிறார்
x

கோப்புப்படம்

பிரதமர் மோடி இன்று குஜராத்தில் பயணம் மேற்கொண்டு பால விபத்துப் பகுதியை பார்வையிடுகிறார்.

ஆமதாபாத்,

குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதன்பின்னர், கடந்த 26-ந்தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது.

குஜராத்தி மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிலையில், பாலத்தில் சில தினங்களுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்டோர் இருந்தபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நிகழ்விடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட உள்ளார். இதை குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story