பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி ஐதராபாத் வருகை


பிரதமர் மோடி  வரும் 19 ஆம்  தேதி  ஐதராபாத் வருகை
x

ஐதராபாத் - விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

ஐதரபாத்,

பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி ஐதாரபாத் வருகை தருகிறார். தெலுங்கானாவில் ரூ.2,400 கோடி மதிப்புள்ள ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதேபோல் ஐதராபாத் - விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்கவும் திட்டமிட்டு வருகிறார் சந்திரசேகர் ராவ். இதனால், பிரதமர் மோடியின் ஐதராபாத் வருகை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Next Story