பிரதமர் மோடி பங்கேற்ற ஐ.நா.,யோகா நிகழ்ச்சி: கின்னஸ் சாதனை படைத்தது...!
யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம் என பிரதமர் மோடி கூறினார்.
Live Updates
- 21 Jun 2023 11:02 PM IST
வாஷிங்டன் டிசி சென்றடைந்தார், பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் டிசி சென்றடைந்தார். முன்னதாக நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார்.
- 21 Jun 2023 9:42 PM IST
நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் வாஷிங்டன் புறப்பட்டார் பிரதமர் மோடி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். அங்கு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தற்போது விமானம் மூலம் வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றார்.
- 21 Jun 2023 9:18 PM IST
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் கலாச்சார நிகழ்ச்சிகள்...!
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபை தலைமையகத்தில் உலக யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு வாஷிங்டனில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களின் சார்பில் கலாச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் உறுப்பினரான நேஹா பரீக் கூறுகையில், நிகழ்ச்சியை நன்றாக நடத்த கடந்த 3 வாரங்களாக இதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம் என்றார்.
- 21 Jun 2023 8:17 PM IST
வாஷிங்டனில் உள்ள நிர்வாக அலுவலக கட்டிடத்தில் பட்டொளி வீசி பறந்த மூவர்ணக்கொடி...!
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. ஐநா உயரதிகாரிகள், 180-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்தநிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, வாஷிங்டனில் உள்ள ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலகக் கட்டிடத்தில், மூவர்ணக் கொடி, அமெரிக்கக் கொடி ஒன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
- 21 Jun 2023 7:46 PM IST
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி - கின்னஸ் சாதனை படைத்தது
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கோரோசி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஐ.நா.சபை வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா செய்தார். பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், யோகா ஆசிரியர்கள் உள்பட சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று யோகா செய்தனர்.
இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி, ‘அதிக நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி’ என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
- 21 Jun 2023 7:04 PM IST
நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை வளாகத்தில் யோகா செய்தார் பிரதமர் மோடி
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கோரோசி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஐ.நா.சபை வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா செய்தார். இந்த யோகா நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், யோகா ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சியில் சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று யோகா செய்து வருகின்றனர்.
- 21 Jun 2023 6:21 PM IST
சர்வதேச யோக நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் - ஐ.நா.வில் பிரதமர் மோடி பேச்சு
அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.சபை வளாகத்தில் நடக்கும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
சர்வதேச யோக நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். யோகாவை நம் வாழ்வின் ஒரு அங்கமாகவும், மேலும் ஆரோக்கியமாகவும் ஆக்குவோம்.
இந்தியாவின் பழமையான பாரம்பரியமான யோகா உலகளாவியது. யோகா என்றால் ஒன்றிணைவது, அனைவரும் ஒன்றிணைவது யோகாவின் மற்றொரு வடிவத்தின் வெளிப்பாடு. ஒட்டுமொத்த உலகமும் யோகாவிற்காக மீண்டும் ஒன்று கூடுவதைப்பார்ப்பது அபூர்வமானது.
உங்கள் அனைவரையும் இங்கு ஒன்றிணைத்துள்ளது யோகா. எங்கள் வளர்ச்சிக்கு எங்களுடன் ஒத்துழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி. சிறு தானியங்கள் நம் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம் என பிரதமர் மோடி கூறினார்.
- 21 Jun 2023 6:13 PM IST
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்திற்கு பிரதமர் மோடி வருகை
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கோரோசி, நடிகர் ரிச்சர்ட் கெரே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தற்போது வருகை தந்துள்ளார்.
- 21 Jun 2023 6:08 PM IST
யோகா நிகழ்ச்சிக்கு முன்னதாக மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
யோகா நிகழ்ச்சிக்கு முன்னதாக நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை வளாகத்தில் வெளியே இருக்கும் மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
- 21 Jun 2023 5:38 PM IST
நியூயார்க்கில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே
நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே வந்தார். அப்போது “...இன்று மிகவும் இனிமையான நாளாக உணர்வதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.