பிரதமர் மோடி ஜூன் 21 அமெரிக்கா சுற்றுப்பயணம்; வெள்ளை மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள்...?


பிரதமர் மோடி ஜூன் 21 அமெரிக்கா சுற்றுப்பயணம்; வெள்ளை மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள்...?
x

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள்?

புதுடெல்லி

விரைவில் பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் ஜூன் 21 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க வெள்ளை மாளிகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஜூன் 21 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி வரவேற்கின்றனர்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமுதாய மக்களும் பிரட்ஜமர் மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜூன் 22 அன்று, பிரதமர் மோடி வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த சுமார் 7000 மக்களிடம் உரையாற்றுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவதுடன், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையிலும் பிரதமர் மோடி வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றுவார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் மோடி.

இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் குவாட் ஒத்துழைப்பில் அடுத்த கட்டத்தை எட்ட அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடியின் தலைமைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். இதனுடன், நாங்கள் குவாடிலும் பணியாற்றி வருகிறோம் என கூறினார்.


Related Tags :
Next Story