காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..!


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 21 July 2023 9:52 AM IST (Updated: 21 July 2023 10:45 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 81-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி கார்கேவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "மல்லிகார்ஜன கார்கே ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story