பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம்


பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் 2  நாள் சுற்றுப்பயணம்
x

வந்தே பாரத் ரெயில் சேவையை திருவனந்தபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.

கொழிஞ்சாம்பாறை,

பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இரண்டு இரண்டு நாள் சுற்று பயணத்தை மேற்கொள்கிறார். அப்போது திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். வேறு பல நிகழ்ச்சிகளிலும்கலந்து கொள்கிறார்.

இதற்காக வரும் (24-4-23) அன்று அவர் மத்திய பிரதேஷ் மாநிலத்திலிருந்து தனி விமான மூலம் கொச்சி வந்து இறங்குகிறார். அன்று மாலை ஐந்து மணிக்குகொச்சி கப்பல் தளத்தில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்.தொடர்ந்து 6மணிக்கு தேவார கல்லூரி மயானத்தில் நடைபெறும் பிஜேபி கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு இங்கு உள்ளதாஜ்மலபார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை (25-4-23) காலை 10:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெரயில் நிலையத்துக்கு சென்று வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறார் மாலை 4 மணி அளவில் பிஜேபி கட்சி தலைவர்களை சந்தித்து உரையாடுகிறார்.

இரவு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு விமானத்தில் டெல்லி செல்கிறார். இவர் தொடங்கி வைக்கப்பட இருந்த வந்தே பாரத் ரெயில் முன்பு திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூர் வரை ஓடும் என கூறப்பட்டிருந்தது, ஆனால் தற்போது அந்த ரெயில் காசர்கோடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story