கர்நாடகத்தில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு பல்வேறு திட்டங்கள்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
மத்திய அரசு-கர்நாடக அரசு சார்பில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 19 வளர்ச்சி பணிகளுக்கு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பெங்களூரு,
மத்திய அரசு-கர்நாடக அரசு சார்பில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 19 வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா பெங்களூரு கெங்கேரி பகுதியில் உள்ள கொம்மகட்டாவில் நடை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, முடிவற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.
அவர் பேசியதாவது:- ரூ.15 ஆயிரம் கோடியில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஆட்சியில் இருந்தவர்களுக்கு ஈடுபாட்டு உணர்வு இருக்கவில்லை. இந்த திட்ட பணிகள் 14 மாதங்களில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இரட்டை என்ஜின் அரசுகளால் இது சாத்தியமாகியுள்ளது.
மேலும் இந்த திட்டத்தால் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த புறநகர் ரெயில் திட்டம் மூலம் பெங்களூரு நகரின் உள்கட்டமைப்பு மேலும் அதிகரிக்கும். இந்த திட்டத்தால் பெங்களூரு நகர மக்களுக்கு பெரும் பயன் ஏற்படும். திறமை மிக்க பெங்களூரு நகர மக்கள் எளிதாக பயணிக்க இது எதவும். இந்த திட்டத்தால் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும்" என்றார்.