மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி,
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் முக்கிய தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பிறந்த நாளையொட்டி மகாத்மா காந்தியின் பஜனை பாடல்கள் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story