வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!


வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!
x

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

வாரணாசி,

பிரதமர் மோடி, தான் போட்டியிட்டு ஜெயித்த வாரணாசி தொகுதியில், விளையாட்டு பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்காக உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ரூ.121 கோடி மதிப்புள்ள நிலத்தை வாரணாசியில் கையகப்படுத்தி கொடுத்து உள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.330 கோடியில் சர்வதேச தரத்துடன் பிரமாண்ட ஸ்டேடியத்தை நிறுவ உள்ளது.

வாரணாசியின் ராஜதலா பகுதியில் உள்ள கஞ்சாரி கிராமத்தில் இந்த மைதானம் அமைகிறது. 30 மாதங்களில் இதை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும். இந்த மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்து கொள்கிறார்கள்.

வாரணாசி தொகுதியில் ரூ.1,115 கோடியில் கட்டப்பட்டுள்ள 16 பள்ளிகளையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும் அவர், பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவதுடன், கலாச்சார விழாவின் நிறைவு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story