பி.எம்.டி.சி. பஸ்சில் கண்டக்டருடன் இளம்பெண் வாக்குவாதம்


பி.எம்.டி.சி. பஸ்சில் கண்டக்டருடன் இளம்பெண் வாக்குவாதம்
x

வடமாநில பெண்ணான தனக்கு இலவச பயண திட்டம் பொருந்தும் என்று கூறி பி.எம்.டி.சி. பஸ்சில் கண்டக்டருடன் இளம்பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு:-

வடமாநில இளம்பெண்

கர்நாடகத்தில் சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் இலவசமாக பெண்கள் பயணம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் அரசு கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சம்பந்தப்பட்ட பெண் கர்நாடகத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது கர்நாடகத்தில் அவர் வசிப்பதற்கான முகவரி அடங்கிய அடையாள அட்டையோ இருக்க வேண்டும் என்பது உள்பட சில விதிமுறைகள் அமலில் உள்ளன. இலவச திட்டத்தால் அரசு பஸ்களில் இருக்கை, டிக்கெட் எடுக்கும் விவகாரத்தில் பயணிகள் இடையே கைகலப்பு, வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்சில் பயணித்த வடமாநில இளம்பெண் ஒருவர் தனக்கும், இலவச பஸ் பயண வசதி செல்லும் என கூறி கண்டக்டருடன் வாக்குவாதம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பெங்களூருவில் இயங்கி வரும் பி.எம்.டி.சி பஸ் ஒன்றில் இளம்பெண் ஒருவர் ஏறினார். அப்போது அவரிடம் கண்டக்டர் அடையாள அட்டையை காட்டுமாறு கூறினார். அப்போது அவர் அடையாள அட்டை எதையும் காட்டவில்லை. மேலும் அவர் 'நான் ஒரு மத்திய அரசு ஊழியர், வடமாநிலத்தை சேர்ந்த நான் பெங்களூருவில் தான் தங்கி இருக்கிறேன்' என கூறி பணி செய்யும் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தார்.

எனினும் அதை ஏற்க கண்டக்டர் மறுத்துவிட்டார். அப்போது சக பயணிகள் அந்த பெண்ணுக்கு அறிவிரை கூறினர். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளாமல் கண்டக்டர் மற்றும் சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story