கொச்சி அருகே போதை மாத்திரைகளை விற்ற பெண் உள்பட 2 பேர் கைது


கொச்சி அருகே போதை மாத்திரைகளை விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
x

கொச்சி அருகே போதை மாத்திரைகளை விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்காடு:

கொச்சி அருகே உதய பேரூர் பகுதியில் உள்ள மருந்துக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் மனநோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை வாங்கி, அதிக விலைக்கு விற்பதாக குத்திக்காடு மதுவிலக்குத்துறை அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் துறையூர் பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது, ஆயிரக்கணக்கான மனநோயாளிகள் சாப்பிடும் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

பின்னர் காரில் வந்த அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது 25). சூரிய பிரபா (19) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மனநிலை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நோயாளிகளுக்கு மருந்து எழுதிகொடுக்கும் லெட்டர் பேடுகளை 2 பேரும் போலியாக தயாரித்து உள்ளனர்.

பின்னர் அவர்கள் மருந்து கடைகளில் லெட்டர் பேடுகளை காண்பித்து, மாத்திரைகளை அதிகமாக வாங்கினர். இந்த மாத்திரைகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட்டால் ஒரு நாள் முழுவதும் போதையாக இருக்கும்.

இதனால் பல கடைகளில் லெட்டர் பேடை காண்பித்து, அதிக அளவு மாத்திரைகளை வாங்கி இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் விஷ்ணு, சூரிய பிரபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story