சொகுசு விடுதியில் அள்ள அள்ள பணம்... நான்கரை கோடி ரூபாயை கைப்பற்றிய போலீசார் - கர்நாடகாவில் பரபரப்பு

சொகுசு விடுதியில் அள்ள அள்ள பணம்... நான்கரை கோடி ரூபாயை கைப்பற்றிய போலீசார் - கர்நாடகாவில் பரபரப்பு
x

கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் போலீசார் சோதனை நடத்தி, நான்கரை கோடி ரூபாயைக் கைப்பற்றியுள்ளனர்.

கோலார்,

கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் போலீசார் சோதனை நடத்தி, நான்கரை கோடி ரூபாயைக் கைப்பற்றியுள்ளனர்.

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பங்கார்பேட் தாலுகாவில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, நான்கரை கோடி ரூபாயை கைப்பற்றினர்.

அந்த தொகை, விடுதியில் இருந்தும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்தும் கைப்பற்றப்பட்டது. அந்த விடுதியை கடந்த இரண்டு ஆண்டுகளாக ரமேஷ் யாதவ் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். அவர், காங்கிரஸ் வேட்பாளருக்கு தெரிந்தவர் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, அந்தப் பகுதியில் இன்று நடத்த இருந்த பிரச்சாரத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரத்து செய்துள்ளார்.

1 More update

Next Story