அரசியல் ஒலிபெருக்கி


அரசியல் ஒலிபெருக்கி
x

ஊழலை ஒழிக்க ஆம் ஆத்மி வெற்றி பெற வேண்டும்

கர்நாடகத்தில் 75 ஆண்டுகளாக காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதாதளம்(எஸ்) ஆகிய கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. 3 கட்சிகளிலும் கொள்ளையர்கள், பலாத்காரம் செய்பவர்கள், பொய்யர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒழிக்கப்பட வேண்டும். மாநிலத்தில் ஊழலை ஒழிக்க ஆம் ஆத்மி வெற்றி பெற வேண்டும். ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தால் பா.ஜனதா அறிவிக்கப்படாத அவசர நிலையை உருவாக்கியுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் இப்போது உத்தரவாத அட்டை கொடுக்கிறது. இதுவும் எங்களது திட்டங்களின் நகல்.

- முக்கிய மந்திரி சந்துரு, ஆம் ஆத்மி.

ஜனதாதளம்(எஸ்) கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம்

எங்கள் கட்சி பற்றி சித்தராமையா கீழ் மட்டமாக பேசி வருகிறார். சித்தராமையா சொந்தமாக கட்சி தொடங்கி, 2 தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா?. சித்தராமையாவுக்கு தனிக்கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலை சந்திக்க தைரியம் இருக்கா?. ஜனதாதளம் (எஸ்) கட்சியை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர்.

- குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி.

சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி

சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதா அரசு இடஒதுக்கீடு அறிவித்துள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில் சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது. சமூகங்களுக்கு இடையே தீவைத்து, அதில் குளிர்காய பா.ஜனதா நினைக்கிறது.இதனால் தான் இடஒதுக்கீடு விவகாரத்தில் பஞ்சாரா மற்றும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டுவார்கள்.

- பரமேஸ்வர் நாயக், முன்னாள் மந்திரி.


இடஒதுக்கீடு விவகாரத்தில் வரலாற்று முடிவு

கர்நாடகத்தில் வீரசைவ லிங்காயத் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கு சரியான இடஒதுக்கீட்டை அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்த ஒரு முதல்-மந்திரியும் எடுக்காத வரலாற்று சிறப்பு மிக்க முடிவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எடுத்துள்ளார். இதற்காக அனைத்து சமுதாயத் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். எந்த சமூகத்திடமும் இருந்து இடஒதுக்கீடு பறிக்கப்படவில்லை. அதுபோன்ற வதந்தியை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் பரப்புகின்றனர்.

- யத்னால், பா.ஜனதா எம்.எல்.ஏ.

சித்தராமையா போன்று என்னையும் நீக்கி விட்டனர்

நான் வேண்டும் என்றே ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை இதற்கு முன்பு எப்படி ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து வெளியேற்றினார்களோ, அதுபோன்று என்னையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டனர். ஒக்கலிக சங்க தேர்தலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டது. இதற்கு நான் காரணம் என்று கட்சியில் இருந்து வெளியேற்றியதால், காங்கிரசில் சேர்ந்துள்ளேன்.

- குப்பி சீனிவாஸ், முன்னாள் மந்திரி.

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு காங்கிரசில் போட்டி

பா.ஜனதா வேட்பாளர் தேர்வு குறித்து 3 ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கு சாதகமாக அலை உள்ளதோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். டிக்கெட் கிடைக்காதவர்கள் ஒற்றுமையாக கட்சிக்காக பணியாற்ற வேண்டும். நாங்கள் அவர்களை சமாதானப்படுத்துவோம். காங்கிரசார் பகல் கனவு காண்கிறார்கள். காங்கிரஸ் 60-70 தொகுதிகளில் வெற்றி பெறும். பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அடுத்த எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பதில் டி.கே.சிவக்குமார்-சித்தராமையா இடையே போட்டி எழுந்துள்ளது.

- எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி.


Next Story