அரசியல் ஒலிபெருக்கி


அரசியல் ஒலிபெருக்கி
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசியலில் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு-

பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டிய அவசியமில்லை

மக்களின் நலனுக்காகவே டெல்லியில் இருந்து பிரதமர் மோடி பந்திப்பூருக்கு வந்தார். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, ஒருமுறை கூட பந்திப்பூர், நாகரஒலேவுக்கு சென்றதில்லை. மைசூருவுக்கு வந்து செம்மறி ஆட்டு கொழுப்பை சாப்பிட்டு செல்லும் உங்களிடம் இருந்து பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டிய அவசியமில்லை. ஊழல்வாதிகளுக்கு புலி போல இருந்த லோக் அயுக்தாவை உங்களிடம் இருந்து காப்பாற்றிய நாங்கள், உங்களிடம் பாடம் கற்க வேண்டியதில்லை.

- பிரதாப் சிம்ஹா, பா.ஜனதா எம்.பி.

பா.ஜனதா ஆட்சிக்கு வராது

கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது என்று அக்கட்சி தலைவர்களுக்கு தெரியும். இதன்காரணமாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் அடிக்கடி கர்நாடகத்துக்கு வந்து பிரசாரம் செய்து வருகிறார்கள். பா.ஜனதாவினர் எந்த நலத்திட்டங்களை அறிவிக்காததால், அதனை வைத்து வாக்கு கேட்க முடியாமல், மோடி பெயரை வைத்து வாக்கு கேட்டு வருகிறார்கள்.

- டி.கே.சிவக்குமார், மாநில காங்கிரஸ் தலைவர்.

காங்கிரஸ் சிக்கலில் உள்ளது

மக்களிடையே பா.ஜனதாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பா.ஜனதா தேசிய தலைவர்கள் கர்நாடகத்துக்கு வருவதை கண்டு காங்கிரஸ் கட்சியினர் பயத்தில் உள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி சிக்கலில் உள்ளது. சித்தராமையா-டி.கே.சிவக்குமார் இடையே மோதல் இருந்து வருகிறது. தேர்தலுக்கு பிறகு அது பெரிய அளவில் வெடிக்கும்.

- ஈசுவரப்பா, முன்னாள் மந்திரி.

மோடியை பார்த்து புலிகளுக்கு பயம்

பிரதமர் மோடி பந்திப்பூர் புலிகள் சரணாயலத்தில் சபாரி சென்றுள்ளார். அவருக்கு புலிகள் தென்படவில்லை. அவரை பார்த்து புலிகளுக்கு பயம். பிரதமர் மோடி தங்களை பிடித்து விற்று விடுவார் என்ற பயத்தில் எந்த குகையில் புலிகள் பதுங்கி உள்ளதோ?. அவை பாவம். விலங்குகளை பார்க்க வரும் மோடிக்கு, கர்நாடகத்தில் கொரோனா, இயற்கை சீற்றத்தை பார்க்க வர மனமில்லை.

- சித்தராமையா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்.


Next Story