என்னை போன்ற எளிய மனிதர்கள் அரசியலில் வெற்றிபெற காங்கிரஸ் தான் காரணம் - மல்லிகார்ஜூன கார்கே


என்னை போன்ற எளிய மனிதர்கள் அரசியலில் வெற்றிபெற காங்கிரஸ் தான் காரணம் - மல்லிகார்ஜூன கார்கே
x

என்னை போன்ற எளிய மனிதர்கள் அரசியலில் வெற்றிபெற காங்கிரஸ் தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று இரவு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ஜெய் பாரத் சத்தியாகிரக சபா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போன்றோர் ஊக்கப்படுத்தவில்லை என்றால் என்னைப்போன்ற எளிய மனிதர்கள் எம்.பி. ஆகியிருக்க முடியாது. காங்கிரஸ் தலைவராக பணியாற்ற சோனியா காந்தி எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இது மிகப்பெரிய பொறுப்பு.

பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று தேர்தலில் அளித்த வாக்குறுதியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்தது மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களையும் வலுவிழக்க செய்துவிட்டது' என்றார்.


Next Story